சென்னை:

த்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவலை வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் வேலை செய்து வருவதாகவும், அவர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், காவலர்கள் மன அழுத்தம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், காலர்களுக்கு உரியமுறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டு மென்றும் கடந்த 02.07.2012 அன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக பணியில் இருக்கும் காவலர்கள் தற்கொலை மேலும் அதிகரித்து வருகிறது என்றும், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என உயர்நிதி மன்ற கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், காவலர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தரப்படும் அழுத்தமே அப்பாவி பொதுமக்கள் மீதான கோபமாக மாறுகிறது என்று கூறினார்.

மேலும் 1979ம் ஆண்டே ஆர்டர்ஜி முறை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில்,  இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் காவலர்கள் வேலை பார்க்கிறார்கள்? ஆர்டர்லி முறையினை ஒழித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்ன ஆயிற்று? என்று சராரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு உத்தரவுபடி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் உருவாக்கப் பட்டதா, காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அன்று அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து வழக்கின் அடுத்த விசாரணையை 22ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.