போலீஸ் துப்பாக்கி மாயமான வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

டில்லி:

மணிப்பூரில் போலீஸ் அலுவலகத்தில், துப்பாக்கிகள் திருடப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வை, தேசியபுலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் இருந்து, 2016, 2017ம் ஆண்டுகளில் 56 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மாயமாயின. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

சமீபத்தில் இம்பாலில் உள்ள காங்கிரஸ் – எம்.எல்.ஏ. யாம்தோங்ஸ் ஹோகிப்பின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆயுத கிடங்கில் மாயமான போலீஸ் பிஸ்டல், பல்வேறு ஆவணங்கள் அப்போது கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து எம்எல்ஏ.வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடல்நிலை பாதித்துள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது வரை 16 பிஸ்டல்கள் மீட்கப்பட்டுள்ளது.