ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் இந்திய அரசியல் சாசனம் குறித்து உரையாற்ற குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் இன்று ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடந்த 2-ம் தேதி நடந்த பாரத் பந்தின் போது நாகவுர் நகரில் வன்முறை வெடித்தது. இதனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேவானி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் நாகவுர் நகருக்குள் நுழைய அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர். அகமதாபாத்திற்கு திரும்பி செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். ஊடகங்களிடம் பேசவும் அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.