சென்னை,
திராமங்கலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து, பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக, மக்கள் மீது லேசான தடியடி நடத்தியதாக கூறி உள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, பலரை கைதுசெய்தனர்.

இதுகுறித்து திமுக சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கு பதிலளித்த முதல்வர், கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கதிராமங்கலத்தில் பொதுமக்கள் சிலர் அதிகாரிகள் மீதும், போலீஸார் மீதும் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், காவல் ஆய்வாளர் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், சாலையில் வைக்கோலைப் போட்டு தீவைத்து அதிகாரிகளைப் பொதுமக்கள் தடுத்தனர்.

ஓ.என்.ஜி.சி விவகாரம் தொடர்பாக கதிராமங்கலத்தில் இதற்கு முன் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. காவல்துறையினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கதிராமங்கலம் கிராம பொதுமக்கள் கேட்கவேயில்லை.  அதன்பின்னர், அங்கு குறைந்த அளவிலேயே தடியடி நடத்தப்பட்டது’ என்றார்.

முதல்வரின் இந்த பதில் ஓன்ஜிசிக்கு ஆதரவாக உள்ளதாகவும்,  அவர் மத்திய அரசின் அடிமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.