கொச்சின் விமான நிலையத்தில் போராட்டம் : 200 பேர் மீது வழக்கு

கொச்சின்

பரிமலை கோவில் செல்ல வந்துள்ள திருப்தி தேசாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சபரிமலைக் கோவிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

நாளை சபரிமலை கோவில் செல்ல ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் ஆறு பெண்களுடன் இன்று காலை 4.40 மணிக்கு கொச்சின் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை எதிர்த்து விமான நிலைய வாசலில் ஐயப்ப பக்தர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

இதனால் காவல்துறையினர் அவரை வெளியில் செல்லக் கூடாது என தடுத்து விமான நிலையத்தின் உள்ளேயே தங்க வைத்துள்ளனர். போராட்டம் தொடர்ந்து வரும் வேளையில் காவல்துறையினர் அங்கு கூடி இருந்த 200 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Police booked cases against 200 people for protesting in Cochin airport
-=-