பேராசிரியை நிர்மலா தேவி கைது….வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து மாதர் சங்கத்தினர், மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் பேராசிரியை இன்று காலை முதல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று நிர்மலா தேவியை கைது செய்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: põlice broke the house door and arrested Professor Nirmala Devi today, பேராசிரியை நிர்மலா தேவி கைது....வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி
-=-