கார் ரேஸில் ஈடுபட்டவர்களுக்கு வருமானவரித்துறை கிடுக்கிப்பிடி!

சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரேஸில் ஈடுபட்ட அதி நவீன சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 27ம் தேதி சென்னை ஈ.சி.ஆர். சாலையில் அதி வேகமாக சென்று ரேஸில் ஈடுபட்ட 10 சொகுசு சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். , மிக அதிக வேகத்தில் செல்வதாக காவல்துறைக்கு புகார் வந்தது.

, ஃபெராரி, லாம்போகினி, மெர்சிடீஸ், ஆடி, பென்ஸ் போன்ற அந்த உயர்ரக சொகுசு கார்களின் மதிப்பு 70 கோடி ரூபாய்  இருக்கும் என்று சொல்லப்பட்டது.

தற்போது இந்த கார் உரிமையாளர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் (மார்ச்) ஆறாம்தேதி நேரில் ஆஜராகி,  விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

.