பிற சாதி பெண்களை கட்டியணைப்போம் என்று முழக்கமிட்டவர்கள் மீது காவல்துறையில் புகார்

காதலிப்போம்.. கட்டிப்பிடிப்போம்!: அம்பேத்கர் நினைவுநாளில் இப்படி ஓர் முழக்கம்!

சில இளைஞர்கள், “வன்னியர் பெண்ணை காதலிப்போம்.. கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம்.. முதலியார் பெண்ணை  கட்டி அணைப்போம்…” என்று முழக்கமிட்டு நேற்று அம்பேத்கர் நினைவு நாளை கடைபிடித்திருக்கிறார்கள்.\

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

“காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் சாதியை மனதில் வைத்து குறிவைத்து காதலிப்பது என்பது எப்படி காதலாகும்? அதே போல  குறிப்பிட்ட இனத்தைச் சொல்லி அந்த இனப் பெண்ணை கட்டிப்பிடிப்போம் என்பது எவ்வளவு அநாகரீகம்?

 

 

இதிலும் சாதி வெறிதானே தெரிகிறது? அதோடு ஆணாதிக்க வெறியும் இதில் இருக்கிறது.

எங்கள் அக்கா தங்கையை பிற சாதியைச் சேர்ந்த இளைஞனுக்கு திருமணம் செய்துகொடுப்போம் என்று முழங்க இவர்களுக்கு மனம் வரவில்லையே.

அது மட்டுமல்ல பட்டியலின மக்களுக்குள்ளேயே சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது. பள்ளர் இன பெண்ணை காதலித்ததற்காக பறையர் இன இளைஞனும், பறையர் இன பெண்ணை காதலித்த சக்கியலிய இளைஞரும் கொல்லப்படும் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

ஆகவே பள்ளர் இளைஞர் பறையர் பெண்ணை திருமணம் செய்வோம், பறையர் இளைஞர் அருந்ததிய பெண்ணை திருமணம் செய்வோம்,” என்று முழக்கமிட்டு உறுதி எடுத்துக்கொள்ளலாமே இந்த இளைஞர்கள்” என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சற்று முன் வேலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவி, குடியாத்தம் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் வன்னிய இனப் பெண்களை கட்டியணைப்போம் என்று முழக்கமிட்டு அந்த வீடியோ காட்சியை முகநூலில் பதிந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சாதிப்பிரச்சினையைத் தூண்டும்படியாக இப்படி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“முழக்க வீடியோ”