ஐஎஸ்ஐஎஸ்.க்கு ஆள்பிடிக்கும் பிரச்சாரம்….பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் வகையில் பிரச்சார கொடிகள் 6 இடங்களில் கட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் இவற்றை அகற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக 6 பேரை பெல்சார் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலரும், தற்போதைய பாஜக மாவட்ட உறுப்பினருமான தமப் பார்மன், முஜம்மில் அலி, முன் அலி, புலாக் பர்மான், திபியோதி தாகுரியா, சர்ஜியோதி பைஸியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய நல்பாரி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.