காவேரி மருத்துவமனையில் வெளிநபர்கள் வெளியேற்றம்….போலீசார் தீவிரம்

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் திமுகு தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

இதையடுத்த இன்று இரவு மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னை முழுவதும் பரவலாக போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வெளிநபர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கட்சி பிரமுகர்கள், தொண்டர்களை வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.