பெண்ணை கடத்துவேன் பேச்சு….பாஜக எம்எல்ஏ மீது போலீஸ் வழக்குப் பதிவு

மும்பை:

பெண்களை கடத்துவேன் என்று கூறிய மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்தி வைத்து காதலன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பேன் என்று மகாராஷ்டிரா பாஜக எம்ªல்ஏ ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையமும், தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுளுளது.

இந்நிலையில் ராம் கதம் மீது சோலாபூர் மாவட்டம் பர்ஷாய் காவல் நிலையத்தில் பெண்கள் ஆர்வலர் ஒருவர் புகார் செய்தார். இதையடுத்து அவர் மஈத இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504 மற்றும் 505-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுஎ. நீதிமன்றம் அனுமதியின்றி ராம் கதமிடம் போலீஸ் விசாரணையை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.