கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு

சென்னை:

கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர், போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.