தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது எஃப். ஐ. ஆர்.பதிவு!

உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, காமராஜ்

வருமான வரித்துறை அளித்த புகாரின் பேரில் தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, காமராஜ்  ஆகியோர மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழாம் தேதி அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக  புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அமைச்சர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் உலவுகிறது.