கௌஹாத்தியில் கடந்த 12ம் தேதியன்று மாலை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சாம் ஸ்டாஃபோர்ட் உயிரிழந்தார். இந்த சம்பவம் அசாமின் மிகப்பெரிய நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஹடிகானில் நடந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், Scroll.in உடன் பேசிய போது, காவல்துறையினர் எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மேலும் அவர்கள் எச்சரிக்கை கூட கொடுக்கவில்லை என்றும் கூறினர்.

“நான்கு ஐந்து பொலிஸ் வாகனங்கள் வந்து நெருங்கி வந்த எதிர்ப்பாளர்களிடமிருந்து சிறிது தூரத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டன” என்று ஸ்டாஃபோர்டு தாக்கப்பட்டபோது அங்கு இருந்த ஆசிப் ஆலோம் கூறினார். “பின்னர் ஹெல்மெட் அணிந்த பல ஆண்கள் கடைசி வாகனத்திலிருந்து கீழே இறங்கி, நிலை எடுத்து எந்த எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.”

பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை அல்லது ரப்பர் தோட்டாக்களை உபயோகிப்பது குறித்து கவலைப்படவில்லை மற்றும் தொடக்கத்திலிருந்தே நேரடி தோட்டாக்களைப் பயன்படுத்தினர் என்று அலோம் கூறினார். “அவர்கள் எந்த வாய்மொழி எச்சரிக்கையும் கொடுக்கவில்லை, “நேரடி என்கௌண்டர் தான்“, என்று அவர் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் எழுந்ததால், டிசம்பர் 10 மாலை முதல், குவாஹாத்தியும், மேல் அசாமின் பல பகுதிகளும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து முஸ்லீம் அல்லாத ஆவணமற்ற குடியேறியவர்களை குடிமக்களாக மாற்றும் முயற்சிக்கும் இந்த சட்டம் டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசத்தில் இருந்து குடியேறப் போகிறவர்களால் இந்தமாநிலம் பெளதீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் நிறைந்து விடும் என்று பல அசாமிகள் அஞ்சுகின்றனர்.

10ம் தேதி மாலை, குவாஹாட்டி நிர்வாகம் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை அறிவித்து இணைய சேவைகளை நிறுத்தியது. 12ம் தேதியன்று, ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து மாநிலத்தை உலுக்கியதால், பிராட்பேண்ட் சேவைகளும் முறிக்கப்பட்டன.

12ம் தேதியன்று, புல்லட் காயங்களுடன் 26 பேர் அரசாங்கத்தால் நடத்தப்படும் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் இருவர் – 19 வயது தீபஞ்சல் தாஸ் மற்றும் 17 வயது சாம் ஸ்டாஃபோர்ட் – அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது இறந்தனர்.

காயமடைந்தவர்களில் பலர் வெறும் பார்வையாளர்கள் என்றும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக் கொண்டனர் என்று அவர்களது குடும்பங்கள் கூறுகின்றன.

உள்ளூர் தொழிலதிபர் நியாஸ் அகமது துப்பாக்கிச் சூடு குறித்து இதேபோன்ற ஒரு காட்சியை விவரித்தார். “அவர்கள் மண்டியிட்டு, நிலை எடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என்று அவர் கூறினார். “மக்கள் பின்வாங்கினாலும், அவர்கள் அதை தொடர்ந்தார்கள். உண்மையில், மக்கள் பக்கவாட்டுப் பாதைகளுக்குள் தப்பி ஓடியதால், அவர்கள் அதற்கு வெளியே நிலை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். ”

பாதுகாப்புப் படையினர் மீண்டும் நகர்ந்த பின்னரும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று ஆலோம் கூறினார். “அவர்கள் சாலையின் முழு நீளத்திலும் சுட்டுக்கொண்டேயிருந்தனர்,” என்று அவர் கூறினார்.

Scroll.in உடன் பேசிய அனைவரும் எதிர்ப்பாளர்கள் யாரும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசவில்லை என்று கூறினர்.

ஆனால் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதை காவல்துறை மறுக்கிறது. “அவர்களை அடக்கவதற்கான மற்ற அனைத்து யுத்திகளும் ஏராளமாக பயன்படுத்தப்பட்டன,” என்று அசாம் காவல்துறையின் கூடுதல் போலீஸ் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜி.பி. சிங் கூறினார். நிலைமையை பொறுப்பேற்க டிசம்பர் 11 ம் தேதி டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட சிங், உயிரிழப்புகளின் அறிக்கைகளை குறைத்து மதிப்பிட்டார்.

“இரண்டு புல்லட் காயங்கள் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தால், பரவாயில்லை,” என்று அவர் கூறினார்.

தோட்டாக்களிலிருந்து தப்பி ஓட்டம்

வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், 51 வயதான நஸ்மீன் கானும், அஃப்ரோஸ் ஹடிகானில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் பால் இல்லை, அக்கம் பக்கத்திலுள்ள சில கடைகள் திறந்திருப்பதை அவள் கேள்விப்பட்டார். அவரது 25 வயது மகள், சுசானா அஃப்ரோஸ், மற்றும் பக்கத்து வீட்டுக்காரர், 41 வயதான நஸ்மா பேகம் ஆகியோரும் சிறிது காற்றோட்டமாக நடந்து வர அவருடன் செல்ல முடிவு செய்தனர்.

அஃப்ரோஸால் பால் வாங்க முடியவில்லை. அதற்கு பதிலாக அவர் ஒரு எதிர்ப்பு பேரணியில் மாட்டிக்கொண்டார் – ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊரடங்கு உத்தரவை மீறி அணிவகுத்து, மத்திய மற்றும் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

நான்கு அல்லது ஐந்து போலீஸ் வாகனங்கள் போராட்டக்காரர்களை அணுகும்போது அவர்கள் நடைபாதையில் நின்று கொண்டிருந்ததாக சுசானா அஃப்ரோஸ் கூறுகிறார். வாகனங்கள் நிறுத்தப்பட்டதும், தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. பேரணியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்ததை சுசானா நினைவு கூர்ந்தார். “துப்பாக்கிச்சூடுகளை ஒத்த உரத்த சத்தங்களை நாங்கள் கேட்டோம், மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள்,” என்று அவர் கூறினார்.

மூன்று பெண்களும் பிரதான சாலையிலிருந்து விலகிச் செல்லும் ஒரு பாதையில் ஓடிவந்ததாக சுசானா அஃப்ரோஸ் கூறினார். “நாங்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தரையில் படுத்துக் கொண்டோம்.”

நஸ்மீன் அஃப்ரோஸ் தனது இடது காலில் ஒரு கூச்ச உணர்வு இருப்பதாக புகார் செய்தபோது அவரது தாயும் அவளும் தரையில் கிடந்தனர். “அவள் ஒரு நரம்பு அல்லது எதையாவது இழுத்ததாக நான் நினைத்தேன், அதனால் அவளுக்கு மசாஜ் செய்ய அவள் காலில் என் கையை வைத்தேன்,” என்று அவர் கூறினார்.

அவள் தாயின் பாதத்தைத் தொட்டவுடன், அது இழுக்கப்பட்ட நரம்பு அல்ல என்பதை சுசானா அஃப்ரோஸ் உணர்ந்தார். “நான் அவளது சதைகளை உணர முடிந்தது, என் கை அவளது இரத்தத்தால் சொட்டிக் கொண்டிருந்தது,” என்று அவர் கூறினார்.

நஸ்மீன் கானும் அஃப்ரோஸ் சுடப்பட்டிருந்தார். ஒரு புல்லட் நாஸ்மா பேகமின் காலையும் கடந்து சென்றது.

ஐந்து நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச் சூடு

இறந்த இருவரில் ஒருவரான தீபாஞ்சல் தாஸ், மாலை 5.30 மணியளவில் லச்சிட் நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவர் பணியில் இருந்து திரும்பி வந்ததாக அவரது சகோதரர் பத்மனா தாஸ் தெரிவித்துள்ளார். இது ஸ்டாஃபோர்டு கொல்லப்பட்ட ஹடிகானில் இருந்து ஆறு கி.மீ தூரத்தில் இருந்தது.

தீபாஞ்சல் தாஸ் சைனிக் பவனில் சமையல்காரராக பணிபுரிந்தார். அவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு சாய்கானில் உள்ள தனது சொந்த கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருந்தார்.

ஹடிகானில் வசிக்கும் அறுபத்திரண்டு வயதான ராஜன் மேதியும், விளக்குகள் அணைக்கப்பட்டு, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியபோது பருப்பு, காய்கறிகள் மற்றும் மருந்துகளை வாங்கச் சென்றிருந்தார். மேதியின் இடது தொடையின் பின்புறத்தில் ஒரு தோட்டாவால் தாக்கப்பட்டு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடைபாதையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த மேதியைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான அமரேந்திர குமார் ஜாதவ், சுசானா அஃப்ரோஸின் அதே கதையை விவரித்தார். “எல்லாம் திடீரென்று இருட்டாகிவிட்டது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்,” என்று அவர் கூறினார். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஜாதவ் கூறினார்.