ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் ரெய்டை தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்ற பறக்கு படையினரை அக்கட்சியினர் தடுத்தனர். இதனால் வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை சென்றபோது, அங்கிருந்த தொண்டர்கள் தடுத்தனர்.

 

அப்போது வானத்தை நோக்கி போலீஸார் சுட்டனர். இதனையடுத்து, அவர்கள் களைந்து சென்றனர்.

தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராகவும், அமுமக வேட்பாளராக தங்க தமிழ்செல்வனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.