சென்னை சேப்பாக்கம், மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை:

சென்னை சேப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினாவில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. இதனால் போலீசார் இங்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது கிடையாது.

இந்நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சில இயக்கங்கள் முடிவு செய்துள்ளது. இதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சேப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.