Random image

மீட்கப்பட்ட கால்நடைகளை வெட்டுவதற்கு விற்பனை செய்த காவலர்

டில்லி

காவலர்களால் மீட்கப்பட்ட கால்நடைகளை மாமிசத்துக்காக அவைகளை வெட்ட ஒரு காவலர் விற்பனை செய்துள்ளார்.

இந்த மாதம் ஒன்றாம் தேதி டில்லியில் உள்ள ஹவுஸ் காஸ் காவல் நிலையத்துக்கு கௌரவ் குப்தா என்பவரிடம் இருந்து புகார் ஒன்று வந்துள்ளது.   விலங்குகள் நல வல்லுனரான அவர் அந்த பகுதியில் கால்நடைகள் துன்புறுத்தப் படுவதாக புகார் அளித்தார்.

அங்கு விரைந்த காவலர்கள் அங்கிருந்து 10 எருமைகளையும் 5 கன்றுக் குட்டிகளையும் விடுவித்துள்ளனர்.   அவைகளில் ஒன்று இறந்து விட்டது.   மீதமுள்ள கால்நடைகளை எஸ்பிசிஏ அமைப்பிடம் அளிக்குமாறு காவல் நிலைய அதிகாரி அந்த காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலரிடம் பொறுப்பு அளித்துள்ளார்.

அந்த தலைமைக் காவலர் அந்த கால்நடைகளை காசிப்பூரில் உள்ள கால்நடைகள் வெட்டும் களத்தில் விற்பனை செய்துள்ளார்.    அதை அறிந்த காவல் நிலையம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.  இது குறித்து காவல் நிலைய அதிகாரி, “உடனடியாக நாங்கள் அந்த இடத்துக்கு சென்றோம்.   அதற்குள் அந்த கால்நடைகல் வெட்ட்ப் பட்டுள்ளன” என கௌரவ் குப்தாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.