வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள். இவருக்கு மாரிச்சாமி என்பவருடன் திருமணம் நடந்து விவாகரத்து பெற்றார். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.

குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. பெருமாளக்காள் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அவரை பெரியவர்கள் சமரசப்படுத்தி மீண்டும் ஆனஸ்ட்ராஜூடன் சேர்த்து வைத்தனர். தற்போது ஆனஸ்ட்ராஜ் மற்றும் குடும்பத்தினர் பெருமாளக்காளிடம் அவரது பெற்றோரிடம் பணம் பெற்று வரக் கூறி கொடுமைபடுத்தியுள்ளனர்.

இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லதா இளம்பெண்ணை சித்ரவதை செய்த ஆனஸ்ட்ராஜ், அவரது பெற்றோர் முனியம்மாள், செல்வம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.