சுஷாந்த் தற்கொலை..காதலி ரியாவிடம் துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்….!

--

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர் .

சுஷாந்த் சிங் உடலை பார்ப்பதற்காக ரியா மும்பையில் உள்ள காப்பர் மருத்துவமனை சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளார் .

வெள்ளை உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்துவிட்டு சென்றதும், கண்ணீரோடு காரில் ஏறியதும் பெரிய வைரல் ஆகியுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்ன, உங்களிடம் சுஷாந்த் சிங் என்ன சொன்னார் என்பது குறித்து ரியாவிடம் போலீசார் துருவி துருவி கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருந்தது, மன ரீதியாக எப்படி கஷ்டப்பட்டார், வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா என்று ரியாவிடம் போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.