தீப்பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விஷமிகள் வைத்த தீயா? அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா? என விசாரணை செய்து வருகின்றனர்.