Random image

பேராயரை கைது செய்ய காவல்துறை தயக்கம் : கேரள எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

கொச்சி

ன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த பிஷப்பை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுவதாக கேரள் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் தம்மை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.   இந்த புகார் அளித்து சுமார் 80 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு முன்னேற்றம் காணாமல் உள்ளது.  பேராயரை கைது செய்வது குறித்து காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை சாக்காக வைத்துக் கொண்டு காவல்துறை இந்த வழக்கை தாமதப்படுத்துவதாக கன்னியாஸ்திரி தரப்பினர் கூறி வருகின்றனர்.   பேராயரை கைது செய்யக் கோரி கடந்த 7 நாட்களாக கொச்சியின் போராட்டம் நடைபெறுகிறது.  பேராயருக்கு காவல்துறை ஒரு சம்மன் அனுப்பி உள்ளது.   அந்த சம்மன் கிடைக்கவில்லை என பேராயர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் கேரள எதிர்க்கட்சிகள் பேராயர் பிரான்கோ முலக்கல்லை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுவதாக குற்றம் கூறி வருகின்றன.   அத்துடன் கிறித்துவர்கள் இந்த பாலியல் பலாத்காரம் குறித்து போப் ஆண்டவருக்கு புகார் அனுப்பி உள்ளனர்.   இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் வாடிகனில் உள்ள போப் அலுவலகத்தில் விசாரணை நடக்கும் என கூறப்படுகிறது.