கள்ளக்காதல்.. கொலை:  பெண் போலீஸ் உள்பட  நான்கு காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை:

ள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொல்லப்பட்ட விழக்கில் தொடர்புடைய பெண் காவலர் உட்பட நான்கு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிபவர் சரண்யா (22). இவருடைய கணவர் பிரவீன்குமார், காஷ்மீரில் ராணுவ அதிகாரியாக  பணியாற்றுகிறார்.  சரண்யா தன்னுடைய உறவினர்கள் வீட்டில்  தனதுஒரு வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா டில்லி ஆயுதப்படை போலீசில் சேர்ந்தார். அப்போது அதே பிரிவில் பணியாற்றிய சிவகங்கை கல்லனை (24) மற்றும் அமிர்தராஜ் ஆகியோருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளைடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரண்யா மற்றும் கல்லனை ஆகியோர் பணிமாறுதல் பெற்று திருவள்ளூருக்கு வந்தனர்.  அமிர்தராஜ் சென்னை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்தார்.

இந்த நிலையில் சரண்யா குறித்து அமிர்தராஜூக்கும், கல்லனைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.  இதில், ஆத்திரமடைந்த கல்லனை தன்னுடன் பணியாற்றும், சுந்தரபாண்டி (24), சந்திரன் (23) மற்றும் சந்தானகுமார் (24) ஆகியோருடன் மது போதையில் கல்லனை சரண்யா வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது  அங்கிருந்த அமிர்தராஜூடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்  அமிர்தராஜ், சுந்தரபாண்டியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
இது தொடர்பாக சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அமிர்தராஜ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை சம்பந்தமாக சரண்யாவையும் போலீசார் தங்களது பிடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சரண்யா, கல்லனை, சந்திரன், சந்தானகுமார் ஆகிய நால்வரையும் பணி நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர்  சாம்சன் உத்தரவிட்டுள்ளார்.

சுந்தரபாண்டியை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அமிர்தராஜூம் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published.