காஞ்சிபுரம் காவலர் மர்ம மரணம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் மோகன்ராஜ் என்பவர்  மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்மமான முறையில் இறந்துகிடந்த காவலர் மோகன்ராஜ்

காவல்நிலையத்தில் இருந்து  மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன்ராஜ் மர்மமான முறையில் திருமங்கலம் கண்டிகை பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் வேலை பளு, மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீஸ்காரரான மோகன் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதி காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.