மனைவிக்கு கோயில் கட்டி வணங்கும் காவல்துறை அதிகாரி!

திருப்பதி,

னைவிக்கு கோவில் கட்டி வணங்கி வருகிறார் ஆந்திர  மாநில டிஎஸ்பி ஒருவர். தனது அன்பு மனைவியை தெய்வமாக போற்றி வரும் அவரது செயல் ஆச்சரியப்பட வைக்கிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்ட டி.எஸ்.பி. ஆக இருப்பவர் முனி ராமையா. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அளவான குடும்பமாக இருந்த அவர்களது இல்லத்தில் நோய் குடி புகுந்தது

. அதன் காரணமாக அவரது மனைவி உடல் நோய்வாய்ப்பட்டது. இதன் காரணமாக 2015ம் ஆண்டு, முனிராமையைவையும், 3 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு அவர் மரணத்தை தழுவினார்.

இதுகுறித்து முனிராமையா கூறியதாவது,

மனதுக்கு பிடித்தவள் மனைவியாக வந்துவிட்டாள் வாழ்க்கையில் வேறென்ன சந்தோஷம். அதுபோல்தான் என் மனைவி வாணியும்.   நான் வேலைக்காக வெளியே சென்றிருந்தாலும் எனது மனைவி என்னையே நினைத்துக்கொண்டிருப்பார். உணவு வேளையின்போது, நேரம் தவறாமல் சாப்பிடும்படி போன் செய்து நினைவூட்டுவார். அதுபோல் வேலை விஷயமாக இரவு செல்ல தாமதமானாலும், நான் வரும்வரை, அவரும் சாப்பிடாமல் காத்திருப்பார். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம்.

எனது மனைவிக்கு செம்பருத்திப்பூ அதிக இஷ்டம். மேலும் எனக்கு ஏராளமான பரிசுகள் கிடைக்க உந்துசக்தியாக இருந்தவர் எனது மனைவிதான்… இவ்வாறு சொல்லும்போதே அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய தொடங்கியது.

தனது மனைவியின் மீது உள்ள அன்பின் காரணமாக, அவரது உருவ சிலை செய்து தனது வீட்டில் வைத்துள்ளார். தினசரி காலை வேலைக்கு செல்லும் முன் அநத சேலையை அலங்கரித்து வைத்து, அதை வணங்கிவிட்டுத்தான் வேலைக்கு போவதாகவும் கூறினார்.

தனது மனைவிக்கு கோவில் கட்டுவதற்காக தாஜ்மஹாலுக்கு உபயோகப்படுத்திய சலவை கற்கல் உள்ள பகுதியான, ராஜஸ்தானை சேர்ந்த மக்ரானா  பகுதிக்கு சென்று சலவைக்கல் ஆர்டர் செய்து, அதன் மூலம் கோவில் கட்டியுள்ளார்.

மேலும், இந்த கோவிலுக்கு சென்றுவந்தால் தனக்கு மனஅமைதி கிடைப்பதாகவும், கோவிலின் வேலை இன்னும் சிறிது காலத்தில் முடிவடைந்துவிடும் என்றும் கண்ணீர் மல்க  கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published.