மதுபான கடத்தலில் ஈடுபட்ட மகனை காவல் அதிகாரியான அவரது தந்தையே கைது செய்ய வைத்த சம்பவம் பீகாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதவாக காவல்துறையினர் என்றாலே நேர்மையற்றவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் தனது கடமையிலிருந்து தவறாத காவல் துறையினரும் உள்ளார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார் பீகார் காவல்துறையில் பணிபுரியும் பிரபாத் சங்கர் சிங்.

இவரது மகன் இந்தராஜித் அவ்வப்போது வெளிநாட்டு மதுபான பாட்டில்களை கடத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஹோலி பண்டிகை நேரம் என்பதால் நேரம் என்பதால் வெளிநாட்டு மதுவுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆகவே சுமார் வெளிநாட்டு மதுபான பாட்டில்களை கொண்டு வந்து மறைத்து வைத்திருந்திருக்கிறார்.

இந்த விசயத்தை அறிந்த அவரது தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாத் உடனடியாக தர்பங்கா காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது மகன் இந்திரஜித் வீட்டில் அப்பகுதி காவல்நிலைய போலீஸார் சோதனை நடத்தினர். ஏராளமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. உடனே இந்திரஜித் கைது செய்யப்பட்டார்.

தர்பங்கா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தில்நவாஸ் கான், “இன்ஸ்பெக்டர் பிரதாப் , தனது சொந்த மகனையே
மதுபான கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யவைத்தது காவல் துறையினர் பலருக்கும் உதாரணமாக அமைந்துள்ளது” என்று பாராட்டினார்.