மத்திய மண்டல ஐ.ஜி உட்பட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

மத்திய மண்டல ஐ.ஜி, மயிலாப்பூர் துணை ஆணையர் உட்பட பல காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், மயிலாப்பூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி சி.பி.சி.ஐ.டி சைபர் செல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி அலுவலகம் விரிவாக்கம் பிரிவு ஐ.ஜியாக இருந்த ஜெயராம், சென்னை மாநகர தலைமையிட ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜியாகவும், மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்த வரதராஜூ, திருச்சி காவல் ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி