ஜாமியா போராட்டத்தின் போது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயம்!

புதுடில்லி: டிசம்பர் 15ம் தேதி நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறை குறித்த விசாரணையின் போது ஒரு ஏசிபி-தர அதிகாரியின் முன்னிலையில் இரண்டு போலிஸ் பணியாளர்களால் மூன்று தோட்டாக்கள் செலுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.  மோதல்களின் போது ஒரு தோட்டா கூட செலுத்தப்படவில்லை என்று கூறும் டில்லி காவல்துறையின் கூற்றுக்கு மாறானதாக இருக்கிறது.

இது தென்கிழக்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தயாரித்த “வழக்கு நாட்குறிப்பில்” ஒரு குறிப்பைக் கொண்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்து கொண்டது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்ல முயன்றதும் ஆனால் மதுரா சாலையில் அவர்கள் போலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 15 ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் கற்களை வீசத் தொடங்கியதும், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்ததும் போலீசார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லத்தி சார்ஜ் நடத்தி இறுதியில் வளாகத்தினுள் நுழைந்தனர்.

போட்டத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, அஜாஸ் அஹ்மத் (20) மற்றும் முகமது ஷோயிப் (23) என அடையாளம் காணப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இரண்டு மாணவர்கள் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொஹமட் தைமின் (23) என அடையாளம் காணப்பட்ட மூன்றாமவர், ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒவ்வொருவரும்அவர் ஒரு புல்லட் காயம் பெற்றதாகக் குற்றம் சாட்டினார். அவர்களின் கூற்றுக்கள் மருத்துவமனையின் எம்.எல்.சி (மருத்துவ-சட்ட வழக்கு) அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டன.