ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு…

சென்னை:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ந்தி அதிகாலை திடீரென காவல்துறையினரால் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, தனக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று கூறி  இடைக்கால ஜாமினில் அன்றே  விடுதலை செய்யப்பட்டார்.