ரஜினிகாந்த் வீட்டுக்கு  போலீஸ் பாதுகாப்பு

சென்னை:

சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். வழக்கம்போல, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாவிட்டாலும்,  அவரது அரசியல் பிரவேசம் குறித்து சமூகவலைதளங்களில் வாத பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசியல் பிரபலங்கள் பலரும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில், கி. வீரலட்சுமி என்பவர் தலைமையில் இயங்கும், . தமிழர் முன்னேற்றப்படை  என்ற அமைப்பு,  ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவரது வீட்டு முன் இன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்தது.

இதையடுத்து ரஜினியின் வீட்டு முன் பலத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.