Random image

அழகிரியின் அமைதிப் பேரணி : காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு

சென்னை

ன்று மு க அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி நடக்க உள்ளதால் காவல்துறையினர் தீவிர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த திமுக தலைவஎ கருணாநிதியின்  மகன் அழகிரி திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார்.   இவருக்கும் இவர் சகோதரர் ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட அதிகார மோதலால் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.    அதன் பிறகு மீண்டும் திமுகவில் இணைய இவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

மு கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கடந்த மாதம் 13ஆம் தேதி அவருடைய நினைவிடத்தில் அழகிரி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.  அப்போது செய்தியாளர்களிடம், “நான் ஏற்கனவே என் ஆதங்கத்தை எனது தந்தையிடம் தெரிவித்துள்ளேன்.  அது குறித்து இப்போது உங்களுக்கு தெரியாது.   கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர்” என தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது.

இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அழகிரி அறிவித்திருந்தார்.  இன்று நடைபெற உள்ள பேரணியில் கலந்துக் கொள்ள அழகிரி சென்னை வந்துள்ளார்.  காவல்துறை அவருடைய பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.  வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு அமைதிப் பேரணி தொடங்க உள்ளது.   இந்த அமைதிப் பேரணி நடைபெறுவதை ஒட்டி காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடையில் ஸ்டாலின் திமுக தலைவரானார்.   தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாக அழகிரி அறிவித்தார்.   அதற்கு ஸ்டாலின் தர்ப்பில்  இருந்து எந்த பதிலும் வரவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.