ஜனநாயக நாட்டில் கருப்புகொடி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா? பன்வாரிலாலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னை:

ரும் 20ந்தேதி புதுக்கோட்டையில் ஆளுநர் மேற்கொள்ள ஆய்வுக்கு எதிராக  போராட்டம் நடத்த திமுக சார்பில் காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்த திருச்சி  காவல்துறை டிஐஜி, மீறி போராட்டம் நடத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயக நாட்டில்  ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது ஜனநாயக நாடா அல்லது சுடுகாடா என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டையில் ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் நாளை இரவு ரெயில் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து புதுக்கோட்டை சென்ற ஆய்வுபணிகைளை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கருப்புக்கொடி காட்டியும் வருகின்றனர்.  இந்நிலையில், புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்ட புதுக்கோட்டை திமுக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர் புதுக்கோட்டை வருகையை யொட்டி பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆய்வுகள் நடத்திய திருச்சி சரக டிஐஜி ஆர்.லலிதா லெட்சுமியிடமும், திமுகவினர் அனுமதி கோரினர்.

அப்போது, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க இயலாது என்று டிஐஜி தெரிவித்தார்.  தடை யை மீறி போராட்டம் நடத்தினால் ஆளுநர் மாளிகை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த தாக ஐபிசி 124-ன் கீழ் கைது செய்யப்படுவீர்கள். இதன் மூலம் 7 ஆண்டுகள் சிறை தண்டனைக் குள்ளாகும் நிலை ஏற்படும் என டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிஐஜியின் கருத்தை ஏற்க மறுத்த திமுகவினர், தடையை மீறி தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவோம் என அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதுக்கோட்டை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதன் காரணமாக முன்னதாகவே திமுக உள்பட எதிர்க்கட்சியினரை கைது செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும், மற்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான காவல்துறையினர்  வரவழைக்கப்பட்டு  புதுக்கோட்டையில் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி