நாளை டாஸ்மாக் செல்லும் குடிமகன்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள்.. விவரம்

சென்னை:

நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.  மேலும் மது வாங்கும் வாடிக்கையாளர்கள் வயது அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மதுபானங்களை வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை முதல் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி குடிமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்

கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்

கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட வேண்டும்.

மதுவாங்க வருவோர் சமூக இடைவெளியுடன் வரிசையில் வர வேண்டும்.

அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்

எனவும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும் 

மதுபானம் வாங்க வருவோர் வயதுக்கு ஏற்ப நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி  50வயதுக்கு மேற்பட்டோர் காலை 10மணி முதல் 1 மணி வரை

40முதல் 50வயதுக்குட்பட்டோர் மதியம் 1 மணி முதல் 3மணி வரை

40வயதுக்கு கீழ்ப்பட்டோர் 3 மணி முதல் 5 மணி வரை

என உத்தரவிடப்பட்டுள்ளது.