பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

--

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் திடீரென  காணாமல் போனார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் ‘தாத்தா’’ வுடன் இளம்பெண் ஓடிப்போனதாகத் தெரிய வந்ததால், அங்குள்ள காவல் நிலையத்தில், பெண்ணின் உறவினர்கள் முறையிட்டனர்.

அந்த தாத்தாவுக்குப் பேரக்குழந்தைகள் இருப்பதாகவும், இந்த நிலையில் 19 வயது இளம் பெண்ணை  அவர் கடத்தி சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், அந்தப்பெண் மேஜர் என்பதால், இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் அக்கறை காட்டவில்லை.;

இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரர் குஜராத் உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம் , ஹேபியஸ் ஹார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,காணாமல் போன பெண்ணை கண்டு பிடித்து, வீடியோகான்பரன்ஸ் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என போலீசாருக்கு ஆணையிட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்த பெண்ணை ஆஜர் செய்யமுடியாத போலீசார் கால அவகாசம் கேட்டனர்.

அதனை ஏற்ற உயர்நீதிமன்றம், வரும் 13 ஆம் தேதி அந்த பெண்ணை கண்டுபிடித்து, வீடியோகான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டுள்ளது.

-பா.பாரதி.