கடந்த ஜனவரி மாதம் நடந்த துக்ளக் விழாவில் பெரியார் மற்றும் முரசொலி குறித்து ரஜினி பேசியதற்கு பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவரது வீட்டையும் முற்றுகையிட முயன்றனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு போடப் பட்டது. ஒரு காவல் உதவி ஆய் வாளர் தலைமையில் 5 காவலர்கள் ரஜினி வீடு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

கடந்த 2 நாட் களுக்கு முன்பு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை வேண் டாம் என ரஜினி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, சென்னை பெரு நகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திரு நாவுக்கரசு நேற்று ரஜினியை சந்தித்து தற்போதைய சூழலில் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, 2 போலீஸார் மட்டும் பாது காப்புக்கு இருக்க ரஜினி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.