சென்னை:

 திருவள்ளூர் அருகே நடைபெற்று வந்த வாகன  சோதனையின்போது, இருசக்கரவாகனத்தில் ஆண், பெண் இருவரை போலீசார் மடக்கி விசாரணை செய்தபோது, அவர்கள் தப்பி ஓட  முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்  அவர்கள் தங்கியிருந்த புதுக்கோட்டை  வீட்டில் இருந்து  3 லேப்டாப், 5 பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10ந்தேதி இரவு திருவள்ளுர் அருகே  நடைபெற்ற வாகன சோதனையின்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த தம்பி ஒருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் என்பது தெரிய வந்தது.

அவர்கள்  திருவள்ளுரை அடுத்த ஒதப்பை என்னும் கிராமத்தில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்களை விசாரணைக்கு எடுத்த காவல் துறையில் அவர்கள் தங்கி இருந்த வீடுகளில்  சோதனை மேற்கொண்டனர்.‘

விசாரணையின் போது, அவர்கள் இருவதும் தாங்கள்  பெயிண்டர் மர்றும் செவிலியர் என்று கூறி வந்தது தெரிய வந்துள்ளது. இதுபோல பல நக்சலைட்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதைத்தொடர்ந்து அவர்கள் ஏற்கனவே  தங்கி இருந்த புதுக்கோட்டை மற்றும் திருச்சிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் புதுக்கோட்டையில் தங்கியிருந்த வீட்டில் இருந்து 3 லேப்டாப் மற்றும் 5 பென் டிரைவ்களை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.