நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்….!

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது.

இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன்பயணம் செய்துள்ளனர் .

சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தது காவல்துறை .சிறிது நேரத்தில் அவரை பிணையில் அழைத்து சென்றார் ரன்யா கிருஷ்ணன் .