திருவனந்தபுரம்,

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கக்கூடாது, காவல்துறையினரின் சாகசங்களால் பல உயிர்கள் பறிபோயுள்ள என்றும் கேரள உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஹெல்மட்டம் சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் நிலையில், காவல்துறையினரை கண்டதும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், வாகனத்தை வேகமாக இயக்குவதும், அவர்களை காவல்துறையினர் பல்வேறு வகைகளில் மடக்கி பிடிக்க முயற்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வாகனச் சோதனையின்போது நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திச் சென்றோ, பலவந்தமாகவோ நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ரண்டதனி பகுதியை சேர்ந்தவர் தொடர்ந்து பொதுநல மனுவில், ‘‘தான் தனது பைக்கில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது போலீசார் தன்னை இடைமறித்ததாகவும், அப்போது நிலைதடுமாறி போலீசாரை இடித்துக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனது.  ஆனால் இந்த விபத்துக்கு நான்தான் காரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதி மன்ற நீதிபதி நீதிபதி ராஜா விஜயராகவன் ,  ‘‘ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை,  போக்குவரத்து  போலீசார் துரத்திப் பிடிக்கக்கூடாது,  நடுரோட்டில் நின்று கொண்டு வாகான ஓட்டிகளை தடுத்து நிறுத்தக்கூடாது. போலீசார் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனச் சோதனையில் ஈடுபடக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து,  காவல்துறையினர்,  “டிஜிட்டல் கேமரா, போக்குவரத்து கண்காணிப்பு கேமரா, கைபேசி வீடியோ கேமராக்களுக்கு,  மொபைல் போன் கேமராக்கள் போன்ற உபகரணங்களைக் கொண்டு கண்டறிய வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டாலே குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இதை விடுத்து, முட்டாள்தனமாக,  ஹெல்மெட் அணியாமல் வேகமாக செல்லும் வாகனங்களை இடை மறிப்பதை தவிர்த்து, அதன்  பதிவு எண்ணைப் பதிவுசெய்து வாகனத்தின் விவரங்களை வயர்லெஸ் அல்லது வேறு எந்த பயன்முறையிலும் அனுப்பி, அதை இடைமறிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் நோக்கில், சாலையின் நடுவில் குதித்து வாகனங்களை உடல் ரீதியாக நிறுத்த அதிகாரிகள் முயற்சிக்கக் கூடாது,  எந்தவொரு சூழ்நிலையிலும், இரு சக்கர  வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியாததற்காக, வலுக்கட்டாயமாக நிறுத்த முயற்சி செய்யக்கூடாது, அது வாகன ஓட்டியின் வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும்  என்று தெரிவித்துள்ள நீதிபதி, காவல்துறையினரின் இந்த சாகச செயல்களால் பல உயிர்கள் பறிபோயுள்ளன, அதற்கான தீர்வு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. ”

இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளர்.