அமெரிக்கரின் இறந்த உடலை மீட்கச் சென்ற போலீசார் மீதும் பழங்குடியினர் தாக்குதல்!

அந்தமானில் உள்ள செண்டினெல் தீவில் கொல்லப்பட்டதாக கூறப்படும் அமெரிக்கரின் உடலை மீட்க சென்ற போலீசார் மீதும் பழங்குடியினர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமானில் உள்ள வடக்கு செண்டினெல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். மூர்க்க குணமும், பொது அறிவும் இல்லாத அந்த மக்கள் தங்கள் இனத்தை தவிர்த்து அன்னியர்கள் நுழைந்தால் அவர்களை அச்சுறுத்துவதற்காக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

police

கடந்த 2006ம் ஆண்டு அந்த தீவிற்கு சென்ற இரு மீனவர்களை பழங்கியினர் தாக்கி கொன்றனர் இதையடுத்து, வடக்கு செண்டினல் தீவிற்கு செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் சாவ்(27) மீனவர்களுடன் அந்த தீவிற்குள் சென்றுள்ளார். அவரை பார்த்ததும் அங்கு இருந்த பழங்குடியின மக்கள் அம்பு எய்தி ஜான் ஆலனை கொன்றதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அமெரிக்கரின் உடலை மீட்டு தரும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்திய போலீசார் அவரின் உடலை தேடி மீனவர்களுடன் படகில் செண்டினெல் தீவிற்கு சென்றனர். ஆனல் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

போலீசாரை பார்த்த பழங்குடியின மக்கள் அவர்களை உள்ளே செல்ல விடாமல் வில், அம்பு எய்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த போலீசார் படகை திருப்பிக்கொண்டு கரை சேர்ந்தனர். அமெரிக்கரை தேட சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து, “ அவர்கள் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள், நாங்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக படகை திருப்பினோம் “ என்று கூறியுள்ளார்.