டெல்லி சிஏஏ போராட்ட வன்முறை – ஓவைஸி கூறுவதைக் கேளுங்கள்!

ஐதராபாத்: டெல்லி சிஏஏ போராட்டக்காரர்கள் மீது, டெல்லி காவல்துறையினரே கல்வீசி தாக்குதல் நடத்திய மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றுள்ளார் அசாதுதீன் ஓவைஸி.

அவர் கூறியுள்ளதாவது, “டெல்லியில் போலீசார்தான் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லி வன்முறைகள் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெரும் அவமானம்.

டெல்லியில் அமைதி வழியில் போராடிவரும் சிஏஏ போராட்டக்காரர்களை, பாஜக பிரமுகர் ஒருவர் நேரடியாக எச்சரிக்கிறார். மேலும், போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக காலக்கெடு விதித்தும் மிரட்டுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைநகரில் தங்கியிருக்கும் நிலையில், இத்தகைய வன்முறைகள் பெரும் அவமானகரமானவை. பிரதமர் மோடி, பாம்புகளுக்கு பால் வார்க்கிறார். அந்த பாம்புகள் அவரை நிச்சயம் ஒருநாள் தீண்டும்!

டெல்லி வன்முறைகளில் காவல்துறையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ -வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. என்பிஆர் நடைமுறைகளையும் ரத்து செய்வதே தேவையான நடவடிக்கை” என்றார் ஓவைஸி.