சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 1,155 காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 422 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஜூன் 13ம் தேதி கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பிய காவல் உதவி ஆய்வாளருக்கு  மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர். கொரோனா உறுதியான பிறகு அவர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.