நேரில் ஆஜராக ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதியுவு செய்துள்ள காவல்துறை, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் கிடைத்தது. பேஸ்புக்  டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பலரும் எழுதினர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  அவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஓவியாவின் மேனேஜரிடம் அவர் விசாரித்தபோது, தற்கொலைக்கு அவர் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்ததாக இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி