Random image

ஷோபியா : பாஸ்போர்ட்டை ஒப்படைக்க காவல்துறை சம்மன்

தூத்துக்குடி

டும் விமானத்தில் பாஜகவை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி லூயிஸ் ஷோபியா தனது பாஸ்போர்ட்டை நேரில் வந்து ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த திங்கள் அன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றார்.  அப்போது அவருடன் பயணம் செய்த கனடாவில் வசிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி லூயிஸ் ஷோபியா ஓடும் விமானத்தில்  பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

 

அதன் பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசையுடன் ஷோபியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   அதனால் தமிழிசை விமான நிலைய காவலர்களிடம் புகார் அளித்தார்.  அதை ஒட்டி கைது செய்யப்பட்ட ஷோபியாவை வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இதனிடையில் தூத்துக்குடி நீதிமன்றம் ஷோபியாவுக்கு ஜாமீன் வழங்கியதை ஒட்டி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  தற்போது காவல்துறை ஷோபியா தனது பாஸ்போர்ட்டை வரும் 7 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகி ஒப்படைக்க வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளது.   ஷோபியாவின் தந்தை சாமியிடம் அந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது.