ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை !

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபர் ராமானுஜருக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. இந்த வைபவம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேசிய ஜீயர், மத உணர்வுகளை புண்படுத்தும் படி பேசியதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த சையது அலி எனும் நபர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இப்புகாரை பதிவு செய்துக்கொண்ட காவல்துறையினர், 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபர் ராமானுஜருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.