திருநெல்வேலி,

ந்துவட்டி கொடுமை காரணமாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல், போலீசார் தங்களையே மிரட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இதில் தாயும், 4வயது மகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்தனர் 5 மற்றும் 7 வயது பெண் குழந்தைகளும் தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமியும், மகள் சாருண்யாவும்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. ஏழை கூலித் தொழிலாளி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், மதி சாருண்யா, அக்சயா பரணிகா என்ற இரு மகள்களும் உளளனர்.

இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி அதே பகுதியை சேர்ந்த பெண் பைனான்சியர் ஒருவரிடம் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்தவர், இதுவரை  வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை என கூறி பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து,   இசக்கிமுத்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கட்டபஞ்சாயத்துக்கு பெண்மணிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இசக்கிமுத்து நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் நடைபெறும்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 முறை மனு கொடுத்திருக்கிறார். ஆனால்,  காவல்துறையினர் சரிவர நடவடிக்கை எடுக்காமல் பணத்தை கட்டச்சொல்லியே மிரட்டி உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து இன்று  7 வது முறையாக நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து நின்று கொண்டிருந்தார். அபோது யாரும் எதிர்பாரத நேரத்தில் இசக்கிமுத்து தான் கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்து மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டதால் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். அவர்கள் மீது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களின் அருகில் யாரும் செல்ல முடியவில்லை.

அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இசக்கி முத்துவும், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகிய நிலையில், உயிருக்கு போராடியபடி கிடந்த அவர்கள் 4 பேரையும் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

பலத்த தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முத்துலட்சுமி மற்றும் அவரது மகள் சாருண்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மற்ற இருவரும் உயிருக்கு ஆபதான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.

இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

6 முறை புகார் மனு கொடுத்தும், தகுந்த நடவடிககை எடுக்காத மாவட்ட ஆட்சி தலைவரும், அவர் பரிந்துரை செய்தும், தகுந்த நடவடிக்கையை போலீசார்  எடுத்திருந்தால்  இன்று  ஒரு குடும்பமே உயிரோடு கருகியிருப்பதில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆனால் போலீசாரின் ஒருதலைப்பட்சமான விசாரணை காரணமாக இன்று ஒரு குடும்பமே இன்று உயிருக்கு போராடி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில், கத்து வட்டிக்கொடுப்பவர்களை விட கடமையை செய்யாமல் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காத போலீசார்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…