சுஷாந்த் அழித்த டிவிட்டர் மெசேஜை தேடுகிறது போலீஸ்.. ஆதாரம் கிடைக்குமா?

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். இதுவரை 23 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

 

சுஷாந்த் தற்கொலை பற்றி சில கட்டுரைகள் ஊடகங்களில் வெளியானது. அதன் அடிப்படையிலும் தகவல் சேகரிக்க முடிவு செய்துள்ள போலீஸார் கட்டுரை களை வெளியிட்ட ஊடகங்களிடம் எதன் அடிப்படையில் அந்த தகவல்கள் வெளி யிடப்பட்டன என கேட்டுப்பெற எண்ணி உள்ளனர்.
இதற்கிடையில் சுஷாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மெசேஞ்களை அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் டெலிட் செய்திருகிறார். அந்த மெசேஜ் மூலம் தற்கொலைக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கலாம் என்பதால் டிவிட்டர் நிறுவனத்திடம் டெலிட் செய்த அந்த மெசேஜ் பற்றிய விவரங்களை கேட்டு போலீஸார் கடிதம் எழுதி உள்ளனர். ஒருசிலர் இதுகுறித்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர்.