டிடிவி ஆதரவு எம்எல்ஏ.வை கைது செய்ய போலீஸ் தீவிரம்

குடகு:

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந் நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை அறிந்த பழனியப்பன் விடுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு தங்கியுள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்திய பின்னர் தமிழக போலீசார் விடுதியை விட்டு வெளியேறினர்.