தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை:

மிழ்நாடு முழுவதும் நாளை  2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

நாடு  முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுதும் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2ந்தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும்  போலியோ சொட்டு 2வது தவணை முகாம் நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2-ந் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. அதில் 5 வயதிற்கு உட்பட்ட 7,55,938 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

தற்போது 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்காக, சென்னை மாநகரில் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,624 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.