சென்னை:

மிழகத்தில் மார்ச் 10ந்தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

குழந்தைகளை இளம்பிள்ளை வாதம் எனப்படும் கை, கால்களை முடமாக்கும் நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருவது வழக்கம். தமிழகத்தில் ஜனவரி மாதம் இறுதியிலும் பிப்ரவரி மாதத்திலும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.. ஆனால், இந்த ஆண்டு, போலியோ சொட்டு மருந்து தேவையான அளவில் இல்லாததால், முகாம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இ;னறு சென்னையில் நடைபெற்ற,  அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை அறிமுகப்படுத்திய அமைச்சசர், கல்லீரல் மற்றும் பித்தப்பை சிகிச்சை மையத்தில் நவீன கதிரியல் இடையீடு தொகுப்பகம் மற்றும் தியானக் கூடத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்தியாவில் 4 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் 14 ஆண்டுகளாகவும் போலியோ இல்லை என்றும், தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.