5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் – இவிஎம் இயந்திரங்கள் மீது ஐயம் எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களின் நேர்மையான பயன்பாடு குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் பலர்.

அவர்கள் கூறுவதாவது, “இந்த எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட நெதர்லாந்திலேயே, அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு விட்டது. மற்றபடி, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட, இந்தியாவைவிட தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட நாடுகளும் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை.

அதாவது, எப்படி புரோகிராமிங் செட் செய்யப்பட்டுள்ளதோ, அதன்படியே செயல்படும் தன்மை கொண்டது அந்த இயந்திரம். கடந்த தேர்தல்களில், பாஜகவுக்கு சில வாக்குச்சாவடிகளில் 90% அளவிற்கெல்லாம் வாக்குகள் விழுந்தன. இது எப்போதும் சாத்தியமில்லாத விஷயம்.

உண்மையிலேயே, ஒரு வாக்காளர், தான் தேர்வுசெய்த பொத்தானுக்குரிய சின்னத்தில்தான் தனது வாக்கு விழுந்ததா? என்பதை உறுதிசெய்யும் விவிபேட் இயந்திரங்கள், மிக மிக குறைந்த இடங்களிலேயே வைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், அந்த விவிபேட் இயந்திரங்கள், கடந்த தேர்தலில் வெறும் 5% இடங்களில் மட்டுமே வைக்கப்பட்டன. இதுவொரு மாபெரும் மோசடி.

எனவே, இந்தியாவில், இந்த இவிஎம் இயந்திர பயன்பாட்டை ஒழித்தால் ஒழிய, நேர்மையான தேர்தல் முடிவுகள் கிடைக்காது என்கின்றனர் அவர்கள்.