நிவர் புயல் காரணமாக பிரச்சாரம் திடீர் ரத்து: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலானது சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  நாளை கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக மாறி 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் எதிரொலியாக கடலூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில், நிவர் புயல் காரணமாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வரும் 28ம் தேதி முதல் மீண்டும் பிரச்சார பயணம் தொடங்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.